வெளிநாடுகளில் இருக்கும் தமிழக கோவில் சிலைகளை மீட்க தனிக்குழு: டிஜிபி நடவடிக்கை!
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்பதற்கு தனிக் குழு.
By : Bharathi Latha
தமிழக கோவில்களில் இருந்து திருடி செல்லப்பட்ட சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. விலைமதிக்க முடியாத இந்த சிலைகளை சிலை கடத்தல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையும் தற்போது பற்றவில்லை. அதிகமான அளவில் சிலைகள் வெளிநாடுகளுக்கு அதிக விலைகளுக்கு கடத்தப்பட்ட வருகின்றன. எனவே இவற்றை கண்காணிப்பதற்காக தற்போது தனிக் குழு அமைக்கப்பட உள்ளன.
கடத்திச் செல்லப்பட்ட சிலைகள் குறிப்பாக இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதும் தற்போது கண்டறியப் பட்டுள்ளது.அந்த சிலைகள் துரிதமாக மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி, ஐ.ஜி தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று இருந்தார்கள். இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கு தனி குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட உள்ளது. உடனடியாக தனிக்குழு தற்போது அமைக்கப்பட்ட உள்ளது என்றும் இந்த கூட்டத்தின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy:The Hindu