Kathir News
Begin typing your search above and press return to search.

தினமும் எத்தனை காட்சிகள்.. தியேட்டர்களுக்கு புதிய அட்டவணை வெளியீடு.!

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதலை வெளியிட்டது.

தினமும் எத்தனை காட்சிகள்.. தியேட்டர்களுக்கு புதிய அட்டவணை வெளியீடு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 April 2021 10:44 AM IST

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ள நிலையில், தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதலை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்தனர். அதில், அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி காட்சிகள் திரையிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்து திரையரங்குகளை மூடுவது என திட்டமிடப்பட்டது. மேலும், இரவுநேர காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலைக் காட்சியை 9.45-க்கு தொடங்கும் எனவும், மால்களில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு காலை காட்சி திரையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் நான்கு காட்சிகளை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News