Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று 6000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6000 ஐ நெருங்கியுள்ளது. அதன்படி இன்று 5,989 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 6000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2021 6:56 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் பழைய மாதிரி நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இன்று காலை முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுக்குள் வரும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6000 ஐ நெருங்கியுள்ளது. அதன்படி இன்று 5,989 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.




சென்னையில் மட்டும் 1,977 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போன்று இன்று கொரோனாவிலிருந்து 1,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News