தமிழகத்தின் இன்றைய கொரோனா வைரஸ் தொற்று நிலவரம்.!
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதனின் கோரமுகத்தை காட்டத் துவங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.
By : Thangavelu
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதனின் கோரமுகத்தை காட்டத் துவங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.
தற்போது இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ளது. இந்தியாவில் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 864 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,450 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 2ம் அலை வீச தொடங்கிவிட்டதா என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.