Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது இ.பாஸ்.!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே இன்று (மே 17ம் தேதி) முதல் வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது இ.பாஸ்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 May 2021 9:37 AM IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே இன்று (மே 17ம் தேதி) முதல் வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. அதன்படி நேற்று மட்டும் 33,181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 98ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று நேற்று மட்டும் 311 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,670ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகளை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கட்டாயம் இபாஸ் முறை இன்று முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் இபாஸ் எடுத்தால் மட்டுமே போலீசார் மற்ற மாவட்டங்களில் பயணம் செய்ய அனுமதி வழங்குவார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News