Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளில்லா ஊரடங்கு ஆரம்பம்.!

தமிழகத்தில் இன்று காலை முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளில்லா ஊரடங்கு ஆரம்பம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2021 7:45 AM IST

தமிழகத்தில் இன்று காலை முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையில் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.





இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. இதனால் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால் அந்த ஊரடங்கில் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் தொற்று எண்ணிக்கை குறிப்பிட்ட மாவட்டங்களில் உயர்ந்து கொண்டே சென்றது.





இந்நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இன்று மெடிக்கல் கடைகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருக்கும்.





மற்ற வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று பால் விநியோகம் மற்றும் ஊடகம், பத்திரிகை துறை போன்ற அவசியமான பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News