தூத்துக்குடி அருகே கால்வாயில் டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!
தூத்துக்குடி அருகே கால்வாயில் டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!
By : Kathir Webdesk
தூத்துக்குடி அருகே வயல் வேலைக்காக டாடா ஏஸ் வாகனத்தில் 30 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம், மணப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வயல்காட்டில் களைபறிக்கின்ற வேலைக்காக அருகே உள்ள சவரிமங்கலம் கிராமத்திற்கு 30 பெண்களை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது மணியாச்சி அருகே உள்ள கோழிப்பண்ணை வளைவில் வேகமாக திரும்பியபோது பாரம் தாங்காமல், நிலை தடுமாறிய டாடா ஏஸ் வாகனம், சாலையில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் இருந்த 30 பேர் வாகனத்திற்கு அடியில் மாட்டிக்கொண்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இத தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.