மாலை நேரத்தில் தங்கத்தின் விலை ரூ.176 குறைவு.!
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் சூழ்நிலையில், கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
By : Thangavelu
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் சூழ்நிலையில், கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல தொழிலதிபர்கள் தங்கத்தின் மீது பணத்தை முதலீடு செய்து வந்தனர். எப்போதும் பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்வது குறையத் தொடங்கியது.
இதனால் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.40,000 வரை கடந்த ஆண்டில் உயர்ந்தது. இதனால் தங்கத்தை வாங்குவதற்கு சாதாரண மக்கள் பயந்து கொண்டே இருந்தார்கள். பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் வேறு தொழில் மீது முதலீடு செய்தனர்.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.34,112க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று ஒரு கிராம் தங்கம் ரூ.22 சரிந்து ரூ.4,264க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.