Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ் அப் மூலமாக அவசர விசாரணை: தேர்த் திருவிழாவிற்கு அனுமதித்த நீதிமன்றம்!

தேர் திருவிழாவிற்கு அனுமதி தொடர்பான வழக்கை வாட்ஸ் அப் இன் மூலமாக விசாரணை நடத்திய நீதிமன்றம்.

வாட்ஸ் அப் மூலமாக அவசர விசாரணை: தேர்த் திருவிழாவிற்கு அனுமதித்த நீதிமன்றம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 May 2022 1:37 AM GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அஷ்ட வரதராஜ சுவாமி கோவிலில் தேர் திருவிழாவில் நிறுத்தும்படி, 13ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உத்தரவிட்டார். ஏனெனில் சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது ஏற்பட்ட மின்சாரப் பாய்ச்சல் சம்பவம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை எதிர்த்து கோவில் பரம்பரை அறங்காவலர் சீனிவாசன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார்.


ஏனெனில் தேர் கொண்டு செல்லும் பாதையில் இடங்களிலும் குறுகலாக இருப்பதால் மின்கம்பங்கள் சாலையில் உள்பக்கம் அமைந்திருப்பதாகவும், தேரில் நேரத்தைவிட மின்கம்பங்கள் தாழ்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உத்தரவை தடை செய்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அவசர மனுவை நாகர்கோவிலில் இருந்து நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் நேற்று வாட்ஸ் அப் இன் மூலமாக விற்பனை செய்துள்ளார். எனவே மனுதாரர் சார்பில் இருந்து வழக்கறிஞராக ராகவாச்சாரி மற்றும் அறநிலையத்துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் அவர்கள் வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, விழாவை நிறுத்தும்படி உத்தரவை பிறப்பிக்க உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை என்று கூறப்பட்டது.


எனது திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொறுப்புடன் செய்வதற்கு இங்கு சமநிலையை துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவை முறையாக நடத்தும் படியும் நீதிமன்றத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்த்திருவிழா பாதுகாப்புடன் நடைபெற வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதி அவர்கள் பிறப்பித்துள்ளார். கோவில் தேர் கடந்து செல்லும் பொழுது மின்சாரம் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும் அதற்கான முன் கூட்டியே அறிவிப்பை மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Dinamalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News