Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் யானைகளை அசாம் மாநிலத்திற்கே திரும்ப அனுப்புகிறதா தமிழக அரசு?

கோயில் யானைகளை அசாம் மாநிலத்திற்கே திரும்ப அனுப்புகிறதா தமிழக அரசு?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Sep 2022 1:24 AM GMT

அசாம் மாநிலத்தில் இருந்து ஒன்பது யானைகள் தமிழக கோவில்களுக்காக வாங்கப்பட்டது. அவற்றை திரும்ப அனுப்பும் திட்டம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் யானை, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. அதனை பாகன்கள் துன்புறுத்துவது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியானது.

கடந்தாண்டு நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்துார் உட்பட பல்வேறு கோவில்களுக்கு வழங்கப்பட்ட ஒன்பது யானைகளை திரும்ப பெற, அசாம் மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

யானைகளை அசாம் மாநிலத்திற்கு திருப்பி அனுப்ப தடை விதிக்க கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த சிவகணேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டு, தமிழகத்தில் உள்ள ஒன்பது கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளை திருப்பி அனுப்பப் போவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News