கோவில் நிலத்தை மீட்டுத்தர கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்!
கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரச்சொல்லி கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
By : Bharathi Latha
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அடுத்துள்ள தெலுங்கும் பட்டியில் தற்போது கம்பளத்து நாயக்கர் சொந்தமான சக்காலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த கோவிலைச் சேர்ந்த கிராம மக்கள். கடந்த 14ம் தேதி 6 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியுள்ளது இதில் முக்கிய நிகழ்ச்சியாக மாடு மாலை தாண்டும் விழா கோவிலின் முன் நடக்க உள்ள அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கோவிலின் சொத்துக்களை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள்.
அவற்றுக்கு எதிரான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது இந்தப் ஒரு சமயத்தில் கோவில் திருவிழாவில் நடத்தக்கூடாது என்று கூறி அந்த தனிநபர்கள் மக்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பான வழக்கு ஒன்றை கிராம மக்கள் தற்போது தோகைமலை பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ளார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள.
இது தொடர்பான கிராம மக்கள் 100க்கும் மேற்பட்ட நபர்கள் குளித்தலை காவிரி நகரிலிருந்து ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த RTO புஷ்ப தேவி மக்கள் ஒத்துழைப்புக்கு முன்வந்தார்கள். மேலும் அரசு அலுவலங்களில் கோவில் நிலத்தை மீட்டுக் கொடு திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடு என்று வசனங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar News