அம்மா மினி கிளினிக் டாக்டர்கள் ஒரே நேரத்தில் பணி நீக்கமா? வாட்ஸ்அப் குழுக்களில் பரவிய செய்தியால் அதிர்ச்சி!
'Termination' message leaves Amma Mini Clinic doctors worried
By : Anand T Prasad
தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் குழுக்களில் வெள்ளிக்கிழமை செய்தி பரவியதால் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் பின்னர் அவர்களது உயர் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு 1,820 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.
இத விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டபோது, யாரையும் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று துறையிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். "நாங்கள் மருத்துவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தலுக்குப் பிறகு அவர்களைச் சந்தித்து, மற்ற துறைகளில் இடம் மாற்ற முயற்சிப்போம்'' என்றார்.
அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் ஜனவரி 4ஆம் தேதி அறிவித்தார். மருத்துவர்களுக்கு மார்ச் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையின் போது கோவிட் வார்டுகளில் பணியாற்றியுள்ளேன். தற்போதைய அரசின் முடிவால், 1,820 எம்பிபிஎஸ் பட்டதாரிகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. மினி கிளினிக்குகளுக்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டாலும், கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால், அவர்கள் கொரோனா சிகிச்சை பணிக்கு திருப்பி விடப்பட்டனர் என்பது மருத்துவர்களை மிகவும் எரிச்சலூட்டுகிறது.
கோவிட் ICU களில் பணிபுரிந்ததாகவும், நோயாளிகளைக் கொண்டு செல்ல உதவுவதாகவும், ஆனால் பாதிப்புகள் குறைந்து வருவதால் இப்போது பணியிலிருந்து வெளியேற்றப்படுவதாக கூறினர்.