Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார்.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அவர்கள் கவனிக்கும் விதமாக பாடப்புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

By : Thangavelu

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு தற்போது விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்ப அச்சடிக்கப்பட்டுள்ளன. அது போன் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story