கோயில் இடத்திற்கு போலி பத்திரப்பதிவு - நீதிமன்றத்தால் உண்மை அம்பலம்!
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து வீடு கட்டியிருப்பது நீதிமன்றத்தால் உண்மை வெளிவந்துள்ளது.
By : Thangavelu
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து வீடு கட்டியிருப்பது நீதிமன்றத்தால் உண்மை வெளிவந்துள்ளது.
திண்டுக்கல் நகரில் செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அபிராமி அம்மன் கோயிலின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதனிடையே கோயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கோயிலுக்கு சொந்தமான இடங்களும் ஆய்வு செய்யப்பட்டு வரும்போது செல்லாண்டியம்மன் கோயிலுக்கு பாதியப்பட்டது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் எதிர் தரப்பினர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி கோயில் இடத்திற்கு போலியான பத்திரம் தயார் செய்து கட்டப்பட்டதும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் குழு சென்று வீட்டை கையகப்படுத்தியது மட்டுமின்றி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Source, Image Courtesy: Nakkheeran