Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சையில் பயங்கரம்: பச்சிளங் குழந்தை கட்டை பையில் வைத்து திருட்டு!

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கட்டை பையில் வைத்து கடத்தி சென்றுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் பயங்கரம்: பச்சிளங் குழந்தை கட்டை பையில் வைத்து திருட்டு!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 Oct 2021 4:04 PM IST

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கட்டை பையில் வைத்து கடத்தி சென்றுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ராஜலட்சுமிக்கு ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில், ஒரு பெண் என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேளுங்கள் என்று உதவி செய்வது போன்று நடித்தாக கூறப்படுகிறது. அதே போன்று கடந்த 4 நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவுவதாக அவருடனேயே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜலட்சுமியை குளித்துவிட்டு வாருங்கள் அதுவரை குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய ராஜலட்சுமியும் அப்பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். குளித்து முடித்துவிட்டு மீண்டும் வார்டில் வந்து பார்க்கும்போது அந்த பெண்ணையும், குழந்தையும் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அருகாமையில் தேடி பார்த்துள்ளார். ஆனால் குழந்தையும் அப்பெண்ணும் கிடைக்கவில்லை. இதனிடையே தனது கணவருக்கு நடந்த சம்பவம் பற்றி ராஜலட்சுமி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தகவல் போலீசாருக்கு தெரியவரவே, துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு பொறுத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண் கட்டைப் பையில் குழந்தையுடன் வெளியே செல்வது பதிவாகியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண்ணின் வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாயுடன் நட்பாக பழகி குழந்தையை திருடி சென்ற சம்பவம் தஞ்சை மருத்துவமனையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source:Polimer

Image Courtesy:Deccan Herald


Next Story
கதிர் தொகுப்பு
Trending News