Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சாவூர்: மிகவும் பழமை வாய்ந்த ₹500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

தஞ்சாவூரில் மிகவும் பழமை வாய்ந்த சுமார் 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கூறியுள்ளார். மேலும் இவை எந்த கோயிலுக்கு சொந்தமானவை எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: மிகவும் பழமை வாய்ந்த ₹500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Jan 2022 8:34 AM GMT

தஞ்சாவூரில் மிகவும் பழமை வாய்ந்த சுமார் 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கூறியுள்ளார். மேலும் இவை எந்த கோயிலுக்கு சொந்தமானவை எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் வசித்து வருபவரிடம் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் அருண் பாஸ்கர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தனது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் ஒன்று இருப்பதாக கூறினார். இது தனது தந்தை தனக்கு அளித்தாகவும் கூறியுள்ளார்.

இது எங்கிருந்து கிடைத்தது என்பன பற்றிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து போலீசார் மிகவும் பழமை வாய்ந்த மரகத லிங்கத்தை மீட்டு சென்றனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கூறுகையில், தஞ்சையில் மீட்கப்பட்ட மரகத லிங்கம் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பவை கண்டுப்பிடிக்கவில்லை. விரைவில் உரிய கோயிலில் ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Deccan Chronicle

Next Story
கதிர் தொகுப்பு
Trending News