தஞ்சையில் மேலும் 36 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் பெற்றோர்கள்.!
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலும் 36 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலும் 36 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
அது போன்று தஞ்சாவூர், அம்மாபேட்டை மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவிகள் உடல்நிலைகுறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 20 மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 மாணவிகளுக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஒரே பள்ளியில் படித்து 56 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் வருவதால் அரசியல் கட்சிகள் அனைவரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கு மட்டும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும்.
இதனால் மாணவர்களும் கொரோனா தொற்று பயமின்றி தேர்வுக்கு தயாராவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.