Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை தேர் திருவிழா அரசுக்கு தெரியாமல் நடந்தது: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

தஞ்சை தேர் திருவிழா அரசுக்கு தெரியாமல் நடந்தது: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

ThangaveluBy : Thangavelu

  |  27 April 2022 2:10 PM GMT

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது இன்று அதிகாலை (ஏப்ரல் 27) எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. இதற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார். உயிரிழந்த குடும்பத்திருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமலேயே தேர் திருவிழா நடைபெற்றது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இவரது கருத்தை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News