Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் தங்கைக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்ட அண்ணன்.. எதிர்பாராமல் கிடைத்தது இன்ப அதிர்ச்சி.!

ட்விட்டரில் தங்கைக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்ட அண்ணன்.. எதிர்பாராமல் கிடைத்தது இன்ப அதிர்ச்சி.!

ட்விட்டரில் தங்கைக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்ட அண்ணன்.. எதிர்பாராமல் கிடைத்தது இன்ப அதிர்ச்சி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 10:31 PM IST

தனது தங்கையின் படிப்பிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவி கேட்ட விஜய் ரசிகரை சேர்ந்த அண்ணனுக்கு இன்ப அதிர்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி, இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகராகவும் இருந்து வருகிறார். இவர் ‘வாத்தி ரெய்டு’ என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது ட்விட்டரில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில், “ஐயா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கச்சி திருப்பூரில் செயின்ட் ஜோசப் ஸ்கூல் ல ஏழாம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு இன்னைக்கு அரையாண்டுதேர்வு.. கடந்த ஆண்டிலிருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை. அவளுக்கான பாடமும் நடத்தப்படவில்லை தேர்வு லிங்கைஉம் அனுப்பவில்லை.. இதனால் இன்று தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள்.. அரசு பள்ளியில் சேர்க்கலாம் நு பார்த்தா கட்டணம் செலுத்தாமல் டிசி தர மாட்டிங்கராங்க.. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டம் ஐயா.. என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஹரி ட்விட்டர் பதிவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பதிலளித்ததுடன், நடவடிக்கையும் எடுத்துள்ளார். அவரது கோரிக்கை ட்விட்டை குறிப்பிட்டு, மாணவிக்கு தேர்வுக்கான லிங்க் கிடைத்து விட்டது, என ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஹரி நன்றி தெரிவித்துள்ளார். மாணவியின் படிப்பிற்கு உடனடியாக உதவிய முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News