Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் 'கற்போம் எழுதுவோம்' திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.!

மத்திய அரசின் 'கற்போம் எழுதுவோம்' திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.!

மத்திய அரசின் கற்போம் எழுதுவோம் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  11 Nov 2020 7:00 PM GMT

பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 'பத்னா லிக்னா அபியான் ' எனப்படும் கற்போம் எழுதுவோம் திட்டம்' மூலம் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, பள்ளிகள் மூலம் முறைசாரா கல்வி கற்பிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 2011 ல் அடிப்படை கல்வி அறிவு இல்லாதோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தினர். அதன்படி 40 லட்சத்து 50 ஆயிரத்து 303 ஆண்கள், 83 லட்சத்து 80 ஆயிரத்து 226 பெண்கள் என ஒரு கோடியே 24 லட்சத்து 30 ஆயிரத்து 529 பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்கள் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் அடிப்படை கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மோடி அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் 2020- -21 ம் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த அனைத்து கல்வி திட்ட அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட, அடிப்படை கல்வி அறிவு இல்லாத 77 ஆயிரத்து 500 ஆண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 500 பெண்களுக்கு கல்வி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக இத் திட்டத்தில் 5900 பேருக்கு அடிப்படை கல்வி கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 5,900 பேர்களுக்கும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 295 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 295 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற பயிற்சியில் மையத்திற்கு ஒரு தலைமை ஆசிரியர், இரண்டு வட்டார வள மைய மேற்பார்வையாளர் வீதம் பங்கேற்றனர். இவர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்றும், அடிப்படை கல்வி வகுப்பிற்கான பாடங்கள் வந்ததும், நவம்பர் 23 ந்தேதி முதல் கற்பித்தல் பணி துவங்கும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News