விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் நுழைந்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்!
விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் நுழைந்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்!
By : Kathir Webdesk
கோவை மாவட்டம் சிங்காநல்லூரை பகுதியை சேர்ந்தவர் மயூரா ஜெயக்குமார். இவர் மயூரா ரேடியோ மார்ட் என்ற பெயரில் கடை மற்றும் பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றார். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராகவுள் உள்ளார். இவருக்கு தென் மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எப்போதும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்சிப் பணிகளுக்காக சென்றுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு மயூரா ஜெயக்குமார் வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 17 குண்டுகள் இருப்பதை பார்த்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதிகாரிகளிடம் "தன்னிடம் உள்ள துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளேன். இதற்கான உரிமம் கூட வைத்திருக்கிறேன்" என கூறினார்.
மேலும், துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த பையை தவறுதலாக மாற்றி எடுத்து வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.