லஞ்சம் வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக் கொண்ட கவுன்சிலர்: உடந்தையாக இருந்த தி.மு.க பெண் தலைவர்!
லஞ்சம் வாங்கியது உண்மைதான் ஆனால் எனக்காக நான் வாங்கவில்லை என்று திமுக பெண் தலைவரை பகிரங்கமாக மாட்டி விட்ட கவுன்சிலர்.
By : Bharathi Latha
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் தான் சத்தியசீலன் என்பவர். இவர் தன்னுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீடு கட்டுவதற்காக தடை இல்லாத சான்றிதழ் மற்றும் அதற்காக அனுமதி பெற இவர் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இப்படிப்பட்ட வீடியோ வெளியானதில் இருந்து, இவர் வெளிப்படையாக அந்த தவற்றை ஒத்துக் கொண்டு இருக்கிறார். நான் லஞ்சம் வாங்கியது உண்மை, ஆனால் நான் யாருக்காக லஞ்சம் வாங்கினேன்? என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என பேசி இருக்கிறார். மேலும் நான் வாங்கிய பணத்தை நகர்மன்றத்தலைவர் பரிமலா வாங்கச்சொன்னதாலேயே தான் அதை வாங்கியதாகவும் நகர்மன்றக்கூட்டத்திலேயே தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்ல தான் அந்த பணத்தை வாங்கிக் கொடுத்தததற்காக எனக்கு 5,000 ரூபாய் கமிஷன் தந்ததாகவும் சொல்லி தெரிக்கவிட்டார். தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களே மாறி,மாறி தங்களுக்குள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் தி.மு.கவை சேர்ந்த தலைவர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை மக்கள் பணத்தை லஞ்சமாக வாங்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.
Input & Image courtesy: News