Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சுக்கள், பதற்றத்தில் மக்கள் - நடவடிக்கை எடுக்க திணறும் தி.மு.க அரசு

தமிழகத்தில் தொடரும் அடுத்தடுத்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சுக்கள், பதற்றத்தில் மக்கள் - நடவடிக்கை எடுக்க திணறும் தி.மு.க அரசு
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Sept 2022 2:53 PM IST

தமிழகத்தில் தொடரும் அடுத்தடுத்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பியவுடன் இரண்டு பெட்ரோல் குண்டுகளும் வெடிக்கதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த பதட்டம் அடங்குவதற்குள் துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் வீடுகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே பொள்ளாச்சி குமரன் நகர் அருகில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகளான கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா, சரவணன் ஆகிய வீடுகளின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடி உள்ளனர்.

மேலும் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மதன்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.புறத்தில் சச்சின் அருகில் சொந்தமான பிரைவேட் கடைகளிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கோவையில் பா.ஜ.க நிர்வாகிகள் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் ஈரோட்டிலும் பா.ஜ.க நிர்வாகிகளின் கடை மீது பெட்ரோல் நிரம்பிய பாக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.

பாஜகவை சேர்ந்த பிரசன்னா மூர்த்தி மூலப்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார், இடையில் அவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை வீசி சென்றுள்ளனர். அது எரியாத நிலையில் அப்படியே கிடந்ததை பார்த்த பிரசன்ன மூர்த்தி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதுபோல் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர் தியாகு கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கார் சேதமடைந்தது இவ்வாறு தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருவதால் தமிழகத்தில் பதற்ற சூழல் நிலவுகிறது.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News