Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க எம்.எல்.ஏ-வை விரட்டியடித்த குன்றக்குடி மக்கள் - போலீஸ் பாதுகாப்பில் தப்பி ஓட்டம்!

தி.மு.க எம்.எல்.ஏ-வை விரட்டியடித்த குன்றக்குடி மக்கள் - போலீஸ் பாதுகாப்பில் தப்பி ஓட்டம்!

தி.மு.க எம்.எல்.ஏ-வை விரட்டியடித்த குன்றக்குடி மக்கள் - போலீஸ் பாதுகாப்பில் தப்பி ஓட்டம்!

Mohan RajBy : Mohan Raj

  |  11 Nov 2020 3:22 PM GMT

தி.மு.க தலைவர்கள் தமிழகத்தில் மக்களால் விரட்டியடிக்கப்படும் காலம் வந்து விட்டது. தி.மு.க-வினரின் முகமூடியும் சமீப காலமாக மக்கள் மத்தியில் கிழிந்து தொங்குகிறது. அந்த வகையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பனை மக்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன குன்றக்குடியில் ரேஷன் கடை திறப்பு விழாவின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய நியாய விலை கடை திறக்க வேண்டும் என்று கிராம மக்களுடன் இணைந்து அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் மற்றும் அ.தி.மு.க கழக நிர்வாகிகளும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் ஜி. பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெகநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவில் குன்றக்குடி அடிகளார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அங்கு பந்தாவாக வந்த சிவகங்கை மாவட்ட தி.மு.க செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பெரிய கருப்பன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பொதுமக்களை தகாதவார்த்தைகளில் பேசியதுடன், அறையை விட்டு வெளியில் செல்லும்படி கூச்சலிட்டு தகராறு செய்தார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பனின் இந்த கீழ்த்தரமான செயலால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பெரிய கருப்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனுக்கு எதிராக கூச்சலிட்டு அவரை அங்கிருந்து வெளியேறும் படி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொது மக்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். மக்களை புழுக்களாக எண்ணும் தி.மு.க தலைவர்களின் மனநிலை அப்படியே எம்.எல்.ஏ பெரியகருப்பன் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது. தி.மு.க-வின் கோட்டை சரிய துவங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News