Kathir News
Begin typing your search above and press return to search.

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒரு சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Jan 2022 3:13 AM GMT

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒரு சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்க முன்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 3.09 கோடியே ஆண்களும், 3.19 கோடியே பெண் வாக்காளர்களும் இடம் பெற்றிருந்தனர். மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 342 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று புதிய வாக்காளர்கள் பெயர்களும் வெளியிடப்படும். அதாவது சிறப்பு முகாம்களில் பெயர் திருத்தல், நீக்குதல் போன்றவைகளை செய்த வாக்காளர்களின் இறுதி பட்டியலும் இன்று (ஜனவரி 5) வெளியிடப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Economic Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News