Kathir News
Begin typing your search above and press return to search.

'அரசு எங்களை ஏமாற்றிவிட்டது' - மீன்பிடி தடைக்கால நிவாரணம் தராதது குறித்து மீனவர்கள் வேதனை

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்றுடன் மீனவர்கள் கடலுக்கு செல்லும் நிலையில் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண தொகையை தி.மு.க அரசு இதுவரை வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு எங்களை ஏமாற்றிவிட்டது - மீன்பிடி தடைக்கால நிவாரணம் தராதது குறித்து மீனவர்கள் வேதனை
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jun 2022 7:18 AM IST

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்றுடன் மீனவர்கள் கடலுக்கு செல்லும் நிலையில் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண தொகையை தி.மு.க அரசு இதுவரை வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 பேர் வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை.

இந்த அறுபத்தி ஒரு நாட்கள் மீன்பிடிக்க தடை காலத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை சரிசெய்வது, வலைகளை சரி செய்வது போன்ற பராமரிப்பு வேலைகளை செய்து வந்தனர். மேலும் அவர்களுக்கு இந்த தடை காலத்தில் வருமானம் ஏதும் கிடையாது.

இந்நிலையில் தடைக்காலம் முடிந்து தற்போது மீன்கள் பிடிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் சங்க தலைவர் தர்மபிச்சை கூறியதாவது, 'கடந்த ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் தடை விதிக்கப்பட்டதால் மீன்பிடிக்கச் செல்லவில்லை, தற்போது தயாராகி வருகிறோம். இந்த மீன்பிடி காலத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய தடைக்கால நிவாரண தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. நாளை முதல் மீன்பிடிக்கச் செல்ல இருக்கிறோம், தடைக்காலத்தில் தரப்படாத உதவித்தொகை இனி கிடைத்தும் பலனில்லை' என்றார்.

வேண்டும் மேலும் அவர் கூறியதாவது, 'கேரள மாநில விசைப்படகுகள் இங்கு வந்து மீன் பிடித்து நாசப்படுத்தி வருகின்றன அதை பலமுறை சுட்டிக்காட்டியும் தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.



'மீன்பிடி தடைக்காலம் நிவாரணமாக அரசு தரும் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியால் தான் நாங்கள் இரண்டு மூன்று வாரங்களுக்கு சாப்பிட முடியும். எங்கள் மீது அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.


Source - Junior vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News