தமிழகத்தில் 35 பள்ளிகளை தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்த அரசு.!
தமிழகத்தில் 35 பள்ளிகளை தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்த அரசு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் 35 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 35 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் 35 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நிலை உயர்த்தப்படுகின்றனர். மேற்கண்ட 35 பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இதன் பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வேறு பள்ளியை நோக்கி செல்ல வேண்டும். அது போன்று செல்ல வேண்டுமானால் குறைந்தது 3 அல்லது 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராமப்புற மாணவர்கள் செல்லம் நிலை உருவாகிறது.
தற்போது உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தமிழக அரசு மாற்றி அரசாணை வெளியிடப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.