அதிரடிக்கு தயாரான ஆளுநர்: 30ம் தேதி துணைவேந்தர்கள், உயர்கல்வி, கால்நடைத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை !
தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள ராஜப்வனில் அக்டோபர் 30ம் தேதி காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆலோசனைக்கு அழைத்துள்ளார். புதிதாக ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் இது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ஆனால் அரசியல் கட்சியினர் கூறும்போது, திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களிலேயே பல்வேறு துறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆளுநர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து அனைத்து துறை செயலாளர்களிடமும் கேட்டறிகிறார் என்று கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Puthiyathalamurai