Kathir News
Begin typing your search above and press return to search.

கறுப்பர் கூட்டம் மாதிரி தடை பண்ணுங்க யூ2 புரூட்டஸ் யூடியூப் சேனலை - கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்!

கறுப்பர் கூட்டம் மாதிரி தடை பண்ணுங்க யூ2 புரூட்டஸ் யூடியூப் சேனலை - கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2022 8:11 AM IST

சிவபெருமானை பற்றி அவதூராக பேசி வரும் மைனர் விஜய் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவபெருமானை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மீது இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிதம்பரம் நடராஜரை அவதூறாக பேசுவதை கண்டித்தும், யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினார்.

யூ2 புரூட்டஸ் என்ற சேனலை தடை செய்ய வேண்டும், ஏற்கனவே முருகப்பெருமானை அவதூறாக பேசிய விவாகரத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே போல இதற்கும் நடவடிக்கை வேண்டும்.

பெரியார், அண்ணாவை அவதூறாக பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யூ2 புரூட்டஸ் யூடியூப் சேனல் மீது ஸ்டாலின் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Inputs From: Asianet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News