Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரி மலை ரயிலை சாதாரண குடிமகனும் வாடகைக்கு எடுக்கலாம்.. தனியார் வசமானது என்பது பொய்யான தகவல்.!

நீலகிரி மலை ரயிலை சாதாரண குடிமகனும் வாடகைக்கு எடுக்கலாம்.. தனியார் வசமானது என்பது பொய்யான தகவல்.!

நீலகிரி மலை ரயிலை சாதாரண குடிமகனும் வாடகைக்கு எடுக்கலாம்.. தனியார் வசமானது என்பது பொய்யான தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2020 8:12 PM GMT

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அதே போன்று ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் சென்று மலைகளின் இயற்கையை ரசித்து செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு பின் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ரயில் இயக்கப்பட்டது. அப்போது ரயில் பயணிகளை வரவேற்க பணிப்பெண்கள் இருந்தனர். இதனை கண்ட மற்றவர்கள் ரயிலை தனியார் மயமாக்கிவிட்டனர் என்ற தகவலை சமூக வலைதளம் மூலமாக பரப்பி விட்டனர். அந்த செய்தி மலமலவென்று அனைத்து ஊடகங்களிலும் பரவ ஆரம்பித்தது.

இதனிடையே கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் சமீபத்தில் நீலகிரி மலை ரயில் தனியார் நிறுவனத்துக்காக மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்பட்டது. இதற்காக தலைக்கு ரூ.3,000 வீதம் கட்டணமாக ரூ.4.80 லட்சத்தை அந்த தனியார் நிறுவனம் கட்டியது. இதனை தொடர்ந்து நீலகிரி ரயிலை தனியாருக்கு தாரை வார்த்து விட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்பினர்.

இது குறித்து சேலம் கோட்ட அதிகாரிகளிடம் விசாரித்தபோது, விமானங்களை வாடகைக்கு எடத்து பயணிப்பது போல அந்த தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து மலை ரயிலை பயன்படுத்தியது. நாங்கள் ரயில் டிரைவர், உதவி டிரைவர்களை மட்டுமே அனுப்புவோம். சினிமா படங்கள் சூட்டிங் நடப்பதும் இப்படித்தான்.

நீலகிரி மலை ரயில் தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் கொள்கைபடி, எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரயிலையோ அல்லது ஒரு பெட்டியையோ Full traiff rate என்ற முறையில் ஒரு குழுவுக்காக அல்லது திருமண நிகழ்ச்சிக்காக பணம் செலுத்தினால் அவர்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும்.

இது Chartered trip என்று அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல Chartered trip களை இயக்கியுள்ளது. அத்தகைய Chartered trip முறையிலேயே மலை ரயில் டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் படி இயக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டதாக முற்றிலும் தவறான புரிதல் இல்லாத பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. Chartered trip க்கும் ரயில்வேயின் வழக்கமான சேவைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. ரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட் 19ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயிலை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொதுமக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இது போன்றவற்றை எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மக்களை திசை திருப்பி வருகின்றனர். அதற்காகவே மூளையை ரூ.380 கோடிக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News