Kathir News
Begin typing your search above and press return to search.

மனு அளிக்க வந்த மூதாட்டி.. வீட்டுக்கு காரில் அழைத்து சென்ற மதுரை ஆட்சியர்.!

மனு அளிக்க வந்த மூதாட்டி.. வீட்டுக்கு காரில் அழைத்து சென்ற மதுரை ஆட்சியர்.!

மனு அளிக்க வந்த மூதாட்டி.. வீட்டுக்கு காரில் அழைத்து சென்ற மதுரை ஆட்சியர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2020 3:13 PM GMT

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியை தனது காரில் வீட்டுக்கு அழைத்து சென்ற மதுரை ஆட்சியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை, கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் பாத்திமா சுல்தான், இவருக்கு 80 வயது ஆகிறது. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு உடல்நிலை குன்றிய நிலையில் மெல்ல மெல்ல நடந்து வந்து மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மனுவுடன் காத்திருந்தார். அங்கு வந்த ஆட்சியர் அன்பழகன் அலுவலக வளாகத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்து காரை நிறுத்த சொன்னார். மூதாட்டியிடம் என்ன ஏதுவென்று விசாரித்தார்.

மூதாட்டி செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்ததாகவும் தன்னை வீட்டை விட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால் தற்போது கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே வசிப்பதாக கூறினார். மேலும், தான் செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்த வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டின் உரிமையாளர் தர மறுப்பதாகவும் ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து, மூதாட்டியை ஆசுவாசப்படுத்திய ஆட்சியர் அவருக்கு டீ வரவழைத்து குடிக்க சொன்னார். பின்னர் வீட்டுக்கு எப்படி போவீங்க என்று கேட்க, ஐயா, நான் நடந்து வந்தேன் மீண்டும் நடந்தேதான் போக வேண்டும் என பரிதாபமாக கூறியுள்ளார் மூதாட்டி. இதனையடுத்து ஆட்சியர் தனது வாகனத்திலேயே மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து சென்றார். மூதாட்டியின் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போனார்கள்.

தொடர்ந்து மூதாட்டியின் பிரச்னை தீருவதற்கு சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் போலீஸார் தொலைபேசியில் பேசினர். மாவட்ட ஆட்சியரே மூதாட்டியின் வீட்டுக்கு வந்திருப்பதை கேள்விபட்ட வீட்டு உரிமையாளர் திகைத்து போனார். கலெக்டர் வருவாங்கன்னு தெரியாது, ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி கொடுத்துறேன்யா, என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனைதொடர்ந்து, உங்கள் பணம் விரைவில் உங்களுக்கு கிடைத்து விடுமென்று மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார். மேலும், மூதாட்டியின் செலவுக்காக ரூ.5,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மாவட்ட ஆட்சியரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News