திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இந்து நம்பிக்கைகளை இழிவுபடுத்திய ஓவியம் - இந்து முன்னணி, பா.ஜ.க முயற்சியால் அழிப்பு.!
திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இந்து நம்பிக்கைகளை இழிவுபடுத்திய ஓவியம் - இந்து முன்னணி, பா.ஜ.க முயற்சியால் அழிப்பு.!
By : Yendhizhai Krishnan
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியை ஒட்டிய சுற்றுச் சுவற்றில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வரையப்பட்ட ஓவியத்தை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் அழித்துள்ளனர். திற்பரப்பு நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஒரு சுவற்றில் புராணங்களில் வரும் நிகழ்வை மையப்படுத்தி ஒரு ஓவியம் வரையப்பட்டு இருந்தது.
முனிவர்கள், ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டிருக்கும் போது தவத்தைக் கலைக்க தேவலோக மங்கையர் முயல்வது குறித்த இந்த ஓவியம், மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாசமாக வரையப்பட்டு இருந்தது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்து இருந்தது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராததால் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களே அந்த ஆபாச ஓவியத்தை அழித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இது போன்ற இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன. இந்த ஆபாச ஓவியத்தை வரைந்தது யார், அவரை வரையச் சொன்னது யார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்று கண்டறிய வேண்டும் என்று குமரி வாழ் இந்து மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இதில் மாற்று மதத்தினருக்கு தொடர்பு இருக்கிறதா என்று கண்டறிந்து மீண்டும் இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்து மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.Source : https://m.facebook.com/story.php?story_fbid=373220000609409&id=100037642373957