மஹாளய அமாவாசையை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தவர்களை விரட்டிய போலீசார்!
தமிழ்நாடு முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அரசு தடை விதித்திருந்தது.
By : Thangavelu
நாடு முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அரசு தடை விதித்திருந்தது.
முன்னோர்களுக்கு வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாக மஹாளய அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் செய்வதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத அமாவாசை முன்னோர்கள் பூமிக்கு வரும் நாளாக இந்துக்களால் கருதப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் மஹாளய அமாவாசை தினமான இன்று பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு திதி செலுத்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பெருமளவு வரத்தொடங்கினர்.
இதனிடையே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மாவடட் ஆட்சியர் லலிதா உத்தரவிட்டிருந்தார். மேலும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுத்த போலீசார் அறிவிப்பு பலகையும் வைத்திருந்தனர்.
இதனை மீறி பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் விரைந்து சென்று கூடியிருந்தவர்களை விரட்டியடித்தனர். மேலும், வெளியிலிருந்து வருபவர்களையும் தடுத்து வழியனுப்பினர். இதனால் பலர் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
Source, Image Courtesy: Amma Express