Begin typing your search above and press return to search.
கொலை செய்துவிட்டு தப்பிய நபரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்.!
கொலை செய்துவிட்டு தப்பிய நபரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்.!
By : Kathir Webdesk
கடலூர் மாவட்டத்தில் வீரா என்பவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் பின் தொடர்ந்து வருவதை கண்ட கிருஷ்ணா போலீசார் மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக கிருஷ்ணா மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட வீராவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே ஊரில் கொலையானவரும், கொலை செய்தவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story