தேனி: கோயிலில் மரங்களுக்கு 37வது பிறந்தநாளை கொண்டாடிய அர்ச்சகர்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள நாகலிங்க மரங்களுக்கு 37வது பிறந்த நாளை அர்ச்சகர் ராமானுஜர் தீபாராதனை செய்து கொண்டாடியுள்ளார்.
By : Thangavelu
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள நாகலிங்க மரங்களுக்கு 37வது பிறந்த நாளை அர்ச்சகர் ராமானுஜர் தீபாராதனை செய்து கொண்டாடியுள்ளார். லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக ராமானுஜம் 86 உள்ளார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் வளாகத்தில் அதாவது நவம்பர் 10ம் தேதி இரண்டு நாகலிங்க மரக்கன்றுகளை நட்டுள்ளார். தினமும் அதற்கு தண்ணீர் விட்டு பராமரித்து வந்தார்.
இதனிடையே அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பூக்களை சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று நவம்பர் (10) இரண்டு மரங்களும் 37வது வயதை அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மரத்திற்கு தீபாரதனை செய்து வழிப்பட்டார்.
இது தொடர்பாக அர்ச்சகர் ராமானுஜர் கூறும்போது: மரங்களும் இறைவனுடைய பிள்ளைகள் ஆவார். ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகள் கோயிலில் வளர்ப்பது விஷேஷம். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களை நட்டு வைத்தேன். தற்போது அதற்கு 37வது வயதாகிறது. இதனையொட்டி அதற்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளோம். இதுவரை 1,600 திருமணம் செய்து வைத்துள்ளேன். புதுமண தம்பதிகள் நாகலிங்கம் மரத்தை வணங்கி வந்தால் அவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar