Kathir News
Begin typing your search above and press return to search.

60 வருடங்களாக கோவில் ராஜ கோபுரத்தியே ஆக்கிரமித்து வீடு கட்டி வாழ்ந்த குடும்பம்.!

60 வருடங்களாக கோவில் ராஜ கோபுரத்தியே ஆக்கிரமித்து வீடு கட்டி வாழ்ந்த குடும்பம்.!

60 வருடங்களாக கோவில் ராஜ கோபுரத்தியே ஆக்கிரமித்து வீடு கட்டி வாழ்ந்த குடும்பம்.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  8 Nov 2020 3:20 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ‌தெற்கு வீதியில் தொப்பாரங்கட்டி விநாயகர் கோவில் என்று ஒரு கோவில் உள்ளது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு என்று ஒரு ராஜ கோபுரம் இருப்பதே தெரியாத வகையில் ஒரு குடும்பம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ் கோபுரத்தையே ஆக்கிரமித்து அதில் வீடு கட்டி வசித்து வந்திருக்கிறது. அதிகபட்சம் வீட்டுக் கூரையில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்ய வேண்டும், அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தான் வழக்கம். ராஜ கோபுரமே வீட்டுக் கூரையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு ஆக்கிரமித்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் சமஸ்தானம் மற்றும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெருவுடையார் கோயில் உட்பட 88 கோவில்கள் வருகின்றன. அவற்றுள் இந்த தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயிலும் ஒன்று. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலின் ராஜ கோபுரத்தில் உள்ள 430 சதுர அடி அளவிலான மண்டபத்தை அப்போது கோவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த தர்மவான்கள் சபாபதி பிள்ளை என்ற கோவில் பணியாளருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

சபாபதி அங்கு வீடு கட்டி வசித்து வந்த நிலையில் அவரது இறப்புக்குப் பின் அவரது மகன் ஜெயராமனும் மனைவி ஷியாமளாவும் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். கோவில் என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி கதவு, நிலை, ஜன்னல்களுடன் முழுதாக வீடாகவே மாற்றப்பட்ட இந்த இடத்தில் சியாமளா மட்டும் வசித்து வந்திருக்கிறார். ராஜ கோபுரத்தையே இவ்வாறு ஆக்கிரமித்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் அறநிலையத் துறையிடம் முறையிட்டுள்ளனர்‌.

எனினும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டதால் அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூற முடியாது என்று கூறி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. ஆனால் மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கவே வீட்டை, அதாவது ராஜ கோபுரத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்ட போதும் ஷிமாமளா காலி செய்யாமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

எனவே சபாபதி பிள்ளைக்கு அளித்த ஒப்ந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டு பின்னர் முறையாக அதிகாரிகள் துணையுடன் 'ஆக்கிரமிப்பை' அகற்றி இருக்கிறது அறநிலையத்துறை. கண்ணுக்கு பளிச்சென்று தெரியும் ராஜ கோபுரத்துக்கே இந்த நிலை என்றால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பிற அசையும் அசையா கோவில் எந்த நிலையில் இருக்கும் என்று இந்த சம்பவம் இந்துக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.mage widgetimage widget

Next Story
கதிர் தொகுப்பு
Trending News