Kathir News
Begin typing your search above and press return to search.

கமிஷனுக்கு கையேந்தும் சார்பதிவாளர் - 10 % கொடுத்தால் எந்த இடமா இருந்தாலும் பேசி முடிச்சிறலாம்!

கமிஷனுக்கு கையேந்தும் சார்பதிவாளர் - 10 % கொடுத்தால் எந்த இடமா இருந்தாலும் பேசி முடிச்சிறலாம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2022 6:02 AM IST

நெல்லை மாவட்டம் கிழவனேரி கிராமத்தை சேர்ந்தவர் சமீர் ராஜாவுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் இடத்தை ஆவணங்களை சரிபார்க்காமல் ராதாபுரம் சார்பதிவு அலுவலர் சரவண மாரியப்பன் போலியாக வேறு நபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

சார்பதிவாளரை கண்டிக்கும் வகையில் சமீர் அவரது நண்பர் பிரசாத் ஆகியோர் சார் பதிவாளர் அலுவலகம் வந்தனர். பின்னர் அலுவலகத்தின் முன்பாக ஒரு பதாகை வைத்தனர்.

அதில்,

இராதாபுரம் சார் பதிவாளர் சரவணமாரியப்பன் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு நிலங்கள் இருந்தாலும் அதனை நிலத்தின் உரிமையாளர் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ, மிக அருகிலோ இருந்தாலும் இருக்கலாம்.

அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், எந்தவித அசல் ஆவணங்கள் இல்லாமலும், சொத்தின் உரிமையாளர் கையொப்பம் இன்றி சொத்து மதிப்பில் 10 சதவிதம் கமிஷன் கொடுக்கும் நபருக்கு உடனே கிரைய ஆவணமோ, செட்டில் மெண்ட் ஆவணமோ பதிவு செய்து கொடுத்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்கி வரும் சேவை செம்மல் சார்பதிவாளரை வாழ்த்தி வணங்குகிறோம்.

இவரது பணியை செவ்வனே செய்ய உறுதுணையாக இருந்து வரும் இராதாபுரம் வருவாய் துணை வட்டாட்சியர் அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறாம்.

பின்குறிப்பு :

எங்களுடைய சொத்து ஆவண எண்: 81/2021 2.1/4 ஏக்கர் சொத்தை நான் இல்லாமலும் எனது அசல் ஆவணங்கள் இல்லாமல் ராஜகன்னிமரியாள் செட்டில்மெண்ட் மூலம் சாம் ராஜபிரபு பெயருக்கு ஆவணம் பதிவு செய்ததற்கு ஈடாக எங்களை வாழ வைக்க இராதாபுரம் தாலுகா அலுவலகம், காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட இடங்களை எனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டு வாழும் கர்ணணே சரவண மாரியப்பனே உம்மே வாழ்த்த வயதில்லை, எங்கள் தலைமுறையே தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Inputs From: polimer


Next Story
கதிர் தொகுப்பு
Trending News