திருச்செந்தூர் கோயிலில் 39 சவரன் தங்க நகைகள் திருட்டு: அதிர்ச்சியில் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் சந்நிதியில் தரிசனம் செய்தவரின் தோளில் மாட்டியிருந்த பையை மர்ம நபர் வெட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பையில் 39 சவரன் நகை இருந்தது தெரியவந்துள்ளது.
By : Thangavelu
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் சந்நிதியில் தரிசனம் செய்தவரின் தோளில் மாட்டியிருந்த பையை மர்ம நபர் வெட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பையில் 39 சவரன் நகை இருந்தது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இதனிடையே கோயிலின் அருகாமையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதன் பின்னர் குடும்பத்துடன் கணேசன் சாமி தரிசனம் செய்ய சிறப்பு கட்டண வரிசையில் கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது கணேசன் தனது தோளில் வைத்திருந்த பை ஒன்றும் மாட்டியிருந்தார். மூலவர் சுப்பிரமணியர் மற்றும் சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சந்நிதிகளில் தரிசனம் செய்துவிட்டு கொடிமரம் அருகாமையில் வந்திருந்தபோது அவர் தோளில் மாட்டியிருந்த பையின் எடை குறைந்தாக கணேசன் உணர்ந்துள்ளார். இதனால் பயந்துபோன கணேசன் பையை சோதனை செய்தபோது, அதில் துணிப்பையில் சுற்றி 39 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணமும் திருடர்களுக்கு பயந்து வைத்திருந்தார். இதனைதான் பக்தர்கள் போர்வையில் வந்திருந்த திருடன் வெட்டி எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கணேசன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை வலை வீசி தேடி வருகின்றனர். கோயிலுக்கு சாமி தரினசம் செய்ய வந்தவரின் நகை திருடுப்போனது திருச்செந்தூர் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Vikatan
Image Courtesy:Samayam