தேர்தல் விதிமுறைகள்: தேனி ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
அதே போன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரிவர பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான அமைதியான சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கிடுமாறு அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில் ஆட்சியர் பேசினார். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.