Kathir News
Begin typing your search above and press return to search.

தேனி: மனஉளைச்சலால் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை.!

கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி: மனஉளைச்சலால் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 5:50 PM IST

தேனியில் கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது எண்டப்புளி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் 54, இவருக்கு தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த 12ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தங்கியுள்ளார்.





இந்நிலையில், நேற்று மாலை ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதனு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அறையின் ஜன்னல் கதவு வழியாக பார்த்தபோது ஜெயராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பற்றி சுகாதாரத்துறை ஊழியர்கள் க.விலக்கு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News