சின்னமனூர் பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். -
By : Thangavelu
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். -
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி உத்தமபாளையம் பேரூராட்சி மார்க்கையன்கோட்டை, பேரூராட்சி அம்மாபட்டி பகுதிகளில் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாகத வகையில் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்சமயம் வரை ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் 313 நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
அப்பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் குடியிருப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.