Kathir News
Begin typing your search above and press return to search.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.. சென்னை மாநகராட்சி கமிஷ்னர் தகவல்.!

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.. சென்னை மாநகராட்சி கமிஷ்னர் தகவல்.!

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.. சென்னை மாநகராட்சி கமிஷ்னர் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Feb 2021 9:41 AM GMT

சென்னை பெருங்குடி பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநகராட்சி கமிஷ்னர் கோ.பிரகாஷ் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை நகர்புறங்களில் மக்கள் இயற்கையான காற்றை பெறுகின்ற வகையில் 1000 மியாவாக்கி என்ற அடர்வன காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது 51 காடுகள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்த காடுகளில் முழுவதும் நாட்டு வகை மரங்கள், மூலிகை உட்பட அனைத்து தரப்பு மரங்களும் நடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சிறு உயிரினங்கள் வாழும். மற்றும் வெப்பம் பெருமளவு குறையும். நடைபயிற்சி செய்யும் மக்கள் இதனை பொழுதுபோக்கு இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சென்னை மாநகரின் மக்களின் தண்ணீர் பிரச்சினையை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிணறுகள், குளங்கள் புதுப்பித்து தூர்வாரப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களை போன்று கூடுதல் குடிநீர் இருப்பு உள்ளது. நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இந்த கோடை காலங்களில் ஏற்படாது. அனைவருக்கும் குடிநீர் முறையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News