'வெள்ளிக்கிழமை மதியம் அவங்க தொழுகைக்கு போகணும் சீக்கிரம்' - உலமாக்களுக்கு சைக்கிள், ஹஜ் நிதியை சீக்கிரமாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
உலமாக்களுக்கு 5.4 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உலமாக்களுக்கு 5.4 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5.43 கோடி ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் விதமாக மூன்று உலமாக்களுக்கு மிதிவண்டிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மானியம் மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மாநிலத் நிதியாக நபர் ஒருவருக்கு 27,628 ரூபாய் வீதம் மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் மானிய தொகைக்காண காசோலையை வழங்கினார்.
மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நண்பகல் சிறப்பு தொழுகைகளுக்கு இஸ்லாமியர்கள் சொல்வார்கள் என்பதை அறிந்து காலதாமதம் இன்றி காலை 11 மணிக்கே இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.