Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jan 2022 3:01 AM GMT

கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடடு தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூச திருவிழாவான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று (ஜனவரி 18) நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதன் பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது.

மேலும், ஒவ்வொரு ஆண்டு தைப்பூச திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்தும், வேல்குத்தியும் தங்களின் நேரத்தி கடனை செலுத்தி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தை காட்டி திமுக அரசு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது. இதனால் கோடிக்கணக்கான இந்துக்கள் இன்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் யாரும் சென்றுவிடாதபடி பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News