Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் சன்னதியில் தலைவிரித்தாடும் வசூல் வேட்டை - அறநிலையத்துறையின் அலட்சிய நிர்வாகம்

திருச்செந்தூர் சன்னதியில் தலைவிரித்தாடும் வசூல் வேட்டை - அறநிலையத்துறையின் அலட்சிய நிர்வாகம்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2022 7:49 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள், தலைக்கு 2000 ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டுவி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக பிரமுகர் ஒருவர் கோவிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாமி தரிசனம் செய்ய 250 ரூபாய் சிறப்பு தரிசனமும் 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் தரிசனமும் பொது தரிசனமும் நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் தினமும் ஆயுதப்படை காவலர்களை சுழற்சிமுறையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டிருந்தது. தற்போது 100 ரூபாய் கட்டண தரிசனமும், பொது தரிசனமும் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.

கோர்ட் உத்தரவை மீறி கோவில் அதிகாரிகள் பக்தர்களிடம் ஆளுக்கு 2000 ரூபாய் வரை பணத்தை கையூட்டாக பெற்றுக்கொண்டு சண்முகவிலாஸ் மண்டபம் பகுதி வழியாக வசதி படைத்த பக்தர்களை விஐபி போல தரிசனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்னையில் இருந்து வந்திருந்த திமுக பிரமுகர் ஒருவர், பணம் பெற்றுக் கொண்டு சிலரை மட்டும் உள்ளே விடுவது ஏன் ? எனக்கேட்டு பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய தனியார் காவலாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், அற நிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News