Kathir News
Begin typing your search above and press return to search.

திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய திருமாவளவன் - எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.?

திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய திருமாவளவன் - எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.?

திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய திருமாவளவன் - எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.?

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  9 Dec 2020 6:45 AM GMT

இந்து மக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திருமாவளவனைப் பற்றி புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திருமாவளவன், கிருபானந்த வாரியாரைப் பற்றி யாரோ பேசியதை தான் கேட்க நேர்ந்ததாகவும், அதில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் பற சமயங்கள் இரண்டையும் வீழ்த்த வல்ல மகனை தந்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

இங்கு பற சமயங்கள் என்று சமணத்தையும் பௌத்தத்தையும் கூறுவதாகக் திருமாவளவன் பேசியுள்ளார். "சமணத்துக்கும் புத்தத்துக்கும் 'பறச் சமயம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்" என்று கூறும் அவர், திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் கொடுத்ததைப் பற்றி கிருபானந்த வாரியார் கூறியதை விவரிக்கிறார்.

சமணத்தையும் புத்த மதத்தையும் ஒழிக்கவே திருஞானசம்பந்தர் பிறந்ததாகவும் அதற்காகத்தான் அவர் மதுரைக்குச் சென்றதாகவும் கிருபானந்த வாரியார் குறிப்பிடுவதாக கூறும் திருமாவளவன், "அவர் பாடித் தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொலை செய்கிறார்கள்." கழுவேற்றம் பற்றி விவரித்து விட்டு "இவ்வளவு கொடூரமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள்" என்று பேசி இருக்கிறார்.

இதனால் பழைய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கவனத்துக்கும் இது சென்ற நிலையில், திருமுறை போன்ற சைவத் திருமுறைகள் பற்றி திருமாவளவனுக்கு எதுவும் தெரியாது என்பதையே இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

மேலும் 'எண்ணாயிரம்' என்பது சமணத் துறவிகளின் பிரிவை குறிக்கும் நிலையில், 8000 சமணர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியது பற்றியும் விமர்சித்த அவர், திருஞானசம்பந்தர் வாதத்தில் தோற்பவர்கள் கழுமரம் ஏன் வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டே வாதம் செய்ய ஒப்புக் கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்து தர்மத்தில் மனு சாஸ்திரத்தின் படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்" என்று திருமாவளவன் பேசியது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், திருஞானசம்பந்தர் குறித்து அவர் இவ்வாறு பேசியது திருமாவளவன் எந்த அளவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கொண்டுள்ளார் என்பதையே வெளிக் காட்டுவதாக அமைந்துள்ளது.

திருமாவளவன் இதற்கு முன்னர் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்றும், சிதம்பரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்கள் முன்னர் புத்த விகாரங்களாக இருந்ததால் அவற்றை இடிக்க வேண்டும் என்றும் பேசி தனது இந்து வெறுப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சைவ சமயத்தையும் அதன் குரவர்களுள் முக்கியமான சம்பந்தரையும் பற்றி இவ்வளவு இழிவாக பேசியவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்கு சென்றார் என்று இந்து மக்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Source : https://youtu.be/cLDzq9l5-Jk

Next Story
கதிர் தொகுப்பு
Trending News