திருத்தணி கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலித்த ஊழியர் மயிலாப்பூருக்கு மாற்றம்!
திருத்தணி முருகன் கோயிலுக்கு வருபவர்களிடம் பணத்தை வசூல் செய்து வந்த ஊழியர் ஒருவர் தற்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
By : Thangavelu
திருத்தணி முருகன் கோயிலுக்கு வருபவர்களிடம் பணத்தை வசூல் செய்து வந்த ஊழியர் ஒருவர் தற்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம், இடைத்தரகர்கள் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அதில் பாதியை கோயில் ஊழியர்களிடம் வழங்கி வந்துள்ளனர். அதன் மூலம் சிறப்பு தரிசனத்தை சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். சாதாரண பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் இடைத்தரகரை வைத்து பணம் வைத்துள்ளவர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இது பற்றி விசாரித்து அறிக்கை அனுப்பும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் நிர்வாக ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோயிலில் விசாரணை செய்தத்தில் நடைபெற்ற சம்பவம் உண்மை என தெரியவந்துள்ளது.
அதன்படி குமரகுருபரன் கோயில் உதவியாளர் வேலுவை கடந்த 20ம் தேதி திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோயிலுக்கு இடமாற்றம் செய்தார். மேலும், குமார் என்ற ஊழியர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இடமாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar