மதம் மாற கிராம மக்கள் மறுப்பு - வழியை மறித்து சுவர் எழுப்பி சர்ச் நிர்வாகம் அராஜகம்!

By : Kathir Webdesk
திருவண்ணாமலை மருத்துவாம்பாடி கிராம மக்கள், மதம் மாற மறுத்ததால், வழியை மறித்து கிறிஸ்தவ சர்ச் நிர்வாகம் சுவர் எழுப்பியது. அதனை கண்டித்து, கிராம மக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மருத்துவாம்பாடி கிராமத்தில், ஹிந்து ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது.
அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, யேசுபாதம் என்ற பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள மக்களை, மதம் மாற வலியுறுத்தி வந்துள்ளார். பொதுமக்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் மக்கள் பொதுவழியாக பயன்படுத்தி வந்த இடத்தில் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.இது குறித்து கிராம மக்கள் சர்ச் நிர்வாகத்திடம் கேட்டபோது, அது எங்களுக்கு சொந்தமான இடம். அதனால் சுவர் எழுப்பியுள்ளோம் என, கூறியுள்ளனர்.
அந்த சர்ச் நிர்வாகம் மற்றும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
