திருவண்ணாமலை தீப திருவிழா : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது, மாலை 6 மணிக்கு மகாதீபம் !
By : Dhivakar
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் தமிழகத்தின் பிரசத்திபெற்ற ஆன்மீக நிகழ்வாகும். இதை காண பல லட்ச பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீப நாளன்று விரைவார்கள். ஆனால் கொரோன பெருந்தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் தீப திருவிழா நடைபெற இருக்கிறது.
தீப நாளன்று அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றுவது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கார்த்திகை தீப நாளை அவர் அவர் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி கொண்டாட தயார் ஆகிவருகின்றனர்.
Image : Samayam