Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை தீப திருவிழா: 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி ! கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் உள்ளூர் பக்தர்கள் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீப திருவிழா: 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி ! கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை!

ThangaveluBy : Thangavelu

  |  18 Nov 2021 7:32 AM GMT

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் உள்ளூர் பக்தர்கள் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதித்துக்கொள்ளலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்காமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தற்போதைய திமுக அரசு கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தும் தீபத்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள ஏன் அனுமதி வழங்கவில்லை என்ற கேள்வியும் இந்துக்களிடம் எழுந்துள்ளது.

Source: Dinakaran

Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News